IUD கருவி பெண்ணின் கருப்பையைத் துளையிட்டு சிறுநீர்ப்பைக்கு நகர்ந்ததால் அவதி
சீனாவில் 5 ஆண்டுகளாக வயிற்றுப் பகுதியில் வலியால் அவதியுற்று வந்த 26 வயதுப் பெண்ணின் நிலைமைக்குக் காரணம் அவரது சிறுநீர்ப்பையில் மாட்டிக்கொண்டிருந்த IUD கருவி.
பெண்ணின் வயிற்றுப்பகுதியில் வலியோடு சிறுநீரில் இரத்தக்கசிவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வும் ஏற்பட்டது.
2011இல் அவரது கருப்பையில் கர்ப்பத் தடைக்காக IUD கருவி பொருத்தப்பட்டது. இருந்தாலும் அவர் கருவுற்று 2012இல் அறுவை சிகிச்சை மூலம் பிள்ளை பெற்றார்.
பின் அவருக்கு மற்றொரு IUD கருவி பொருத்தப்பட்டது.
அது பெண்ணின் கருப்பையைத் துளையிட்டு அவரது சிறுநீர்ப்பைக்கு நகர்ந்திருந்ததை X-ray படம் காட்டியது.
IUD கருவி பயன்படுத்தும் ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்கு இவ்வாறு நடக்கலாம் என்று சீன மருத்துவ சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்க மருத்துவர்கள் தொடர்ந்து நோயாளிகளைப் பரிசோதித்து வர அறிவுறுத்தப்படுகிறது.
Post a Comment